நானிக்கு மணிரத்னத்தின் சர்ப்ரைஸ் கிப்ட்..!

மணிரத்னம் இயக்கியுள்ள ‘ஓ காதல் கண்மணி’ படம் தெலுங்கில் பங்காரம் என்கிற பெயரில் வெளியாக இருக்கிறது. படத்தின் ஹீரோவான துல்கர் மலையாளம் என்றாலும் கூட தமிழும் நன்றாக பேசுவார். ஆனால் தெலுங்கு சரியாக தெரியாது. அதனால் இந்தப்படத்தின் தெலுங் டப்பிங் பேசும் வாய்ப்பு நானிக்கு கிடைத்துள்ளது.

மணிரத்னத்திடம் இருந்து இப்படி ஒரு உதவி செய்யமுடியுமா என கோரிக்கை வந்து விழுந்த அடுத்தகணம் அவரது படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்த ஒரு பரவசத்தை அடைந்த நானி, உடனே ஓகே சொல்லிவிட்டாராம். டப்பிங் பேசும்போது ‘ஏன்’ என்கிற வார்த்தைக்கு ‘எந்துக்கு’ என நானி பேச, அந்த வார்த்தையைக்கூட எப்படி உச்சரிக்கவேண்டும் என நானிக்கு கிளாஸ் எடுத்தாராம் மணிரத்னம்.