“காக்கா முட்டையை படமாக்க என் பையன் தான் காரணம்” – மணிகண்டன்..!

காக்கா முட்டை படம் தேசிய விருதுடன் சேர்த்து இத்தனை விருதுகளை குவித்திருக்கிறது என்றால் நிச்சயம் அந்தப்படத்தை எடுக்கவேண்டும் என்கிற தாக்கம் ஏதோ ஒரு புள்ளியில் இருந்து உருவாகி, அதன்பின்னர் தான் விஸ்வரூபம் எடுத்திருக்கவேண்டும். இயக்குனர் மணிகண்டனும் கூட அதனை ஒப்புக்கொள்கிறார். ஆனால் அவருக்கான கரு எங்கிருந்து தோன்றியது தெரியுமா..?

“காக்கா முட்டையை படமாக எடுக்க என் பையன் எழிலன் தான் காரணம்.. மூன்று வருடங்களுக்கு முன் ஒரு முறை அழுது அடம்பிடித்து பீட்சாவை கேட்டு வாங்கினான். ஆனால் அதை வாங்கி வாயில் வைத்து கடித்ததும், அதன் சுவையை அவனால் ஏற்றுக்கொள்ள முடியாமல் அப்படியே தூக்கிப்போட்டுவிட்டான். இந்த விளம்பர உலகத்தில் குழந்தைகளை, பெண்களை மயக்கும் விதமான விளம்பர அரசியல் ஒன்று நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பீட்சாவை வாங்கி அந்த அரசியலில் சிக்கிய என் பையன் தான் இந்தப்படத்தை எடுக்க எனக்கு தூண்டுகோலாக இருந்தான் என்கிறார் மணிகண்டன்.