அன்புச்செழியன் தயாரிப்பில் படம் இயக்கும் ‘காக்கா முட்டை’ இயக்குனர்..!

‘காக்கா முட்டை’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி முதல் படத்திலேயே இந்திய சினிமா அளவில் கவனம் ஈர்த்ததோடு, தனது படத்தில் நடித்த சிறுவர்களுக்கு தேசிய விருதையும் வாங்கித்தந்த பெருமைக்குரியவர் இயக்குனர் மணிகண்டன். தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் சுமார் எண்பது லட்ச ரூபாயில் தயாரிக்கப்பட்ட அந்த படம் எட்டு கோடி வரை வசூலித்து சாதனை படைத்தது.

தற்போது இயக்குனர் மணிகண்டன் தனது அடுத்த படத்தை இயக்க தயாராகிவிட்டார். இந்தப்படத்தை தயாரிப்பது தமிழ்சினிமாவின் மிக முக்கிய பொருளாதார சக்தியாக விளங்கும் விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் தான். விக்ரம் பிரபு நடித்த ‘வெள்ளைக்கார துரை’ படத்தை தொடர்ந்து அவர் தயாரிக்கும் இரண்டாவது படம் இது.