சென்னையில் இன்று ஒரே நாளில் தந்தை-மகன் படங்கள் ரிலீஸாகும் அதிசயம்..!

மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ் நடித்துள்ள ‘ஓ காதல் கண்மணி’ படம் இன்று ரிலீஸாகியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசையமைத்துள்ள இந்தப்படத்தை ஸ்டுடியோகிரீன் நிறுவனம் வெளியிடுகிறது. தமிழில் துல்கர் நடிக்கும் இரண்டாவது படம் இது என்பதால் இந்தப்படத்தை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கிறார் துல்கர்.

அதேசமயம் இன்று தான் துல்கர் சல்மானின் தந்தையும் மலையாள திரையுலகின் மெகாஸ்டாருமான மம்முட்டி நடித்த ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ படமும் சென்னையில் வெளியாகியுள்ளது.. ஆனால் இந்தப்படம் கேரளாவில் ஏப்-15ஆம் தேதியே வெளியாகிவிட்டது குறிப்பிடத்தக்கது. தந்தை-மகன் நடித்த படங்கள் இப்படி ஒரே நாளில் ரிலீஸாவது துருவ நட்சத்திரம் தோன்றுவது போல ஒரு அதிசயம் தான்.