5 இயக்குனர்கள் இயக்கத்தில் உருவாகும் ‘ம ம கி கி’..!

ma ma ki ki

இரண்டு இயக்குனர்கள் இணைந்து படம் எடுப்பதை அடிக்கடி பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.. ஒரு சாதனைக்கு எட்டு இயக்குனர்கள் சேர்ந்து இயக்கிய ‘சுயம்வரம்’ படம் பற்றி கூட நமக்கு தெரியும்.. ஆனால் முதன்முறையாக புதியவர்கள் ஐந்துபேர் சேர்ந்து ஒரு படத்தை இயக்கியுள்ளார்கள் என்கிற செய்தி கொஞ்சம் வித்தியாசமானதுதான்..

படத்தின் பெயர் ‘ம ம கி கி’.. என்ன.. ஒன்றுமே புரியவில்லையா..? உங்களுக்கு மட்டுமல்ல இந்தப்படத்தின் டைட்டிலை அறிமுகப்படுத்திய இயக்குனர் கௌதம் மேனனுக்கே இந்த டைட்டிலுக்கான அர்த்தம் தெரியவில்லை.. “படத்தில் ஏதோ இருக்கிறது.. அது என்னவென்று காண ஆவலாக இருக்கிறேன்” என தனது ஆவலையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்..

படத்தை ஐந்து இயக்குனர்கள் இயக்குவது போல, நான்கு இசையமைப்பாளர்கள் சேர்ந்து இசையமைக்கும் அதிசயமும் இந்தப்படத்தில் இருக்கிறது.

இயக்குனர்கள் ; ஜி.ராதாகிருஷ்ணன், வடிவேல், ஸ்ரீகார்த்திக், கார்த்திக் சிவா மற்றும் சமீர் பரத் ராம் (இவர் தயாரிப்பாளரும் கூட)

இசையமைப்பாளர்கள் ; விஷால் சந்திரசேகர், ஜேக்ஸ் பிஜே, எம்.எஸ்.ஜோன்ஸ், சூர்யபிரகாஷ்