மகளிர் மட்டும் செய்த மாயாஜாலம் இதுதான்..!

ஒரு சில படங்கள் பார்த்து ரசித்துவிட்டு ஜஸ்ட் லைக் தட் கடந்துபோகக்கூடியவையாக இருக்கும்.. ஆனால் ஒரு சில படங்கள் படம் பார்த்து விட்டு வெளியே வந்ததும் படத்தின் கதைக்கருவும் நம்மில் சிலரின் வாழ்க்கை நிகழ்வுகளும் ஒரே மாதிரி இருப்பதை உணர வைக்கும்.. அதை தொடர்ந்து நிச்சயம் அதற்கு அடுத்த செயலில் நம்மை அடியெடுத்து வைக்க தூண்டும்..

அப்படி ஒரு படம் தான் சமீபத்தில் வெளியான ‘மகளிர் மட்டும்’ திரைப்படம்.. ஜோதிகா நடிப்பில் பிரம்மா இயக்கியுள்ள இந்தப்படம் பள்ளிப்பருவத்தில் பிரிந்துபோன ஊர்வசி, பானுப்ரியா, சரண்யா என்கிற மூன்று தோழிகளை பற்றியது.. அவர்களை ஜோதிகா எப்படி மீண்டும் அவர்களது பள்ளிப்பருவ குதூகலத்திற்கே அழைத்து செல்கிறார்..இழந்த சந்தோஷத்தை மீட்டுக்கொடுக்கிறார் என்பது தான் மொத்தப்படம்..

இந்தப்படத்தை பார்த்த பெண்கள் பலருக்கும் தங்களது பள்ளிப்பருவ தோழிகளின் ஞாபகம் வந்து கண்களை குலமாக்கியுள்ளது.. அங்கே இங்கே உள்ள சக நண்பர்கள் மொலமாக தங்களது பள்ளித்தோழிகள் இப்போது எங்கே எப்படி இருக்கிறார்கள் என தேட வைத்துள்ளது..

மகளிர் மட்டும் படத்தில் வருவது போலவே நிஜ வாழ்க்கையிலும் ஒன்றாக சேர்ந்த தோழிகள் மூவர் உள்ளனர். அவர்கள் மகளிர் மட்டும் படத்தை பார்த்ததும் தங்கள் வாழ்க்கையில் நடந்தது போலவே படத்தில் சில காட்சிகள் வந்ததால் மிகவும் ஆச்சரியமடைந்துள்ளனர்.

அவர்கள் தயாரிப்பாளர் சூர்யாவை தொடர்பு கொண்டு ‘மகளிர் மட்டும்’ போன்ற தரமான படத்தை தயாரித்ததற்கு வாழ்த்துக்கள். சூர்யா இதை போன்ற தரமான படங்களை தயாரிக்கவேண்டும். மகளிர் மட்டும் எமோஷனலாக எங்கள் மனதை தொட்ட படம் . இதைப்போன்ற கருத்தாழமிக்க திரைப்படங்கள் 2D நிறுவனத்திடமிருந்து நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று கூறியுள்ளனர்.

மகளிர் மட்டும் படத்தை பார்த்த திருமதி. வசந்தி என்ற பெண். படத்தில் வருவது போல தன்னுடைய மற்ற இரு தோழிகளான மலர் மற்றும் ராஜியை கண்டுபிடித்து தரமுடியுமா..? என்று தயாரிப்பாளர் சூர்யாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்… இது மகளிர் மட்டும் படம் பார்த்த பெண்கள் பலர் தங்களுடன் பள்ளி மற்றும் கல்லூரியில் படித்த தோழிகளை நேரில் சந்திப்பதற்காக தேடிவருகிறார்கள் என்பது நமக்கு கிடைத்த தகவல்.

அதனால் ஒரு தயாரிப்பாளராக ‘மகளிர் மட்டும்’ போன்ற ஒரு தரமான படத்தை தயாரித்தற்காக மகிழ்ச்சியாக உள்ளார் சூர்யா. ‘மகளிர் மட்டும்’ படத்தை பார்த்த பெண்கள் அனைவரும் படத்தை பாராட்டி வருகிறார்கள். படத்தில் வருவது போல தங்களுடைய தோழிகளை சந்திக்க ஆர்வமாக உள்ளதாகவும் பலர் செய்திகளை பகிர்ந்து வருகிறார்கள்

இதுதான் மகளிர் மட்டும் படம் செய்த மாயாஜாலம்.