பெண் எம்.எல்.ஏவையும் கவர்ந்த ‘மகளிர் மட்டும்’..!

கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றுவரும் ‘மகளிர் மட்டும்’ படத்திற்கு சாதாரண பெண்களிடம் மட்டுமிருந்து அல்லாமல் அரசியல் பொறுப்பில் இருக்கும் பெண்களிடமிருந்தும் பாராட்டுக்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. குறிப்பாக படத்தை பார்த்த சிபி எம் கட்சி எம்.எல்.ஏவான பாலபாரதி இந்தப்படத்தை பார்த்துவிட்டு தனது வியப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, “யார் அந்த பிரம்மா..? மகளிர் மட்டும் மிக அருமை.. மிகவும் அருமை..! பாராட்டுகள்.. வாழ்த்துகள். பெண்கள் மகிழ்ச்சியோடு மகளிர் மட்டும் படத்தை திரையரங்கில் ரசித்தார்கள்… நானும் அவ்வாறே. பல ஆண்டுகள் பேசியும் யாருக்கும் புரியவில்லையே என நினைத்திருந்த பெண்ணிய கருத்தை மிகுந்த எதார்த்தத்தோடு சித்தரிந்தீர்கள்.. நல்ல கருத்தோடு நல்ல படம். பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.” என்று ட்வீட் செய்திருந்தார்