ஜூன் – 23ல் ‘மெட்ராஸ்’ இசை வெளியீடு..!


‘அட்டகத்தி’ ரஞ்சித் டைரக்‌ஷனில் கார்த்தி நடித்துவரும் ‘மெட்ராஸ்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. நேற்றைய தினம் இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

ஒரு படம் தயாராகிக் கொண்டு இருக்கும்போதே அந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுவதுதான் இதுவரை கோலிவுட்டில் உள்ள நடைமுறை. அதில் இருந்து சற்று மாறுபட்டு முழுப்படமும் முடிந்த பின்னரே  ‘மெட்ராஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது புதிய ட்ரெண்ட்.

வடசென்னை பின்னணியில் எடுக்கப்பட்டுள்ள இந்தபடத்தில் கார்த்திக்கு ஜோடியாக கேத்தரின் தெரசா நடித்திருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஜூன்–23ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அதைத்தொடர்ந்து வரும் ஜூலையில் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தார்.