பாட்டு எழுதியதால் பக்க விளைவுகளுக்கு ஆளான மதன்கார்க்கி..!

விஞ்ஞான கவிஞர் என அனைவராலும் பாராட்டப்படும் பாடலாசிரியர் மதன் கார்க்கி, ஒவ்வொரு பாடல்களுக்கும் வார்த்தைகளை ஆராய்ச்சி செய்து பொறுக்கி எடுப்பவர். தற்போது கார்த்திக் ஜி.கிரிஷ் இயக்கியுள்ள ‘கப்பல்’ படத்தில் ‘காதல் கசாட்டா’ மற்றும் ‘ஒரு கப் ஆசிட்’ ஆகிய பாடல்களை எழுதியுள்ளார்.

இந்த இரண்டு பாடல்களை எழுதியதால் பக்க விளைவுகளுக்கும் ஆளானாராம் மதன் கார்க்கி. அதாவது காதலியின் தன்மையை ஸ்வீட்டிற்கு ஒப்பிட்டு எழுத வேண்டும் என்பதற்காக அனைத்து ஸ்வீட்டுகளின் பெயரையும் தேடிப்பிடித்தாராம்.. அப்படியே ஓவ்வொரு ஸ்வீட்டையும் டேஸ்ட் பார்க்கப் போய், இப்போது அவருக்கு சுகரின் அளவு அதிகரித்துவிட்டதாம்.

அதேபோல ‘ஒரு கப் ஆசிட்’ பாடலில் கேண்டி கிரஷ் விளையாட்டை பற்றி இடம்பெறுவதால் அந்த விளையாட்டை தனது மொபைலில் விளையாடப்போக, இப்போது அந்த கேண்டி கிரஷ் விளையாட்டிற்கும் அடிமையாகிவிட்டாராம்..

ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் வெளியிடும் இந்த ‘கப்பல்’ படத்தில் வைபவ், சோனம் பஜ்வா, கருணாகரன் ஆகியோர் நடிக்க, இசையமைத்துள்ளார் நடராஜன் சங்கரன்.. மேலும் கரகாட்டக்காரன் படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஊருவிட்டு ஊருவந்து’ பாடலையும் ரீமிக்ஸ் செய்திருக்கிறார்களாம்.