‘மாரி’க்கு கிடைத்தது ‘U’ சான்றிதழ்..!

ஒருவிதத்தில் ரவுடியிச படம் மாதிரிதான் ‘மாரி’ ட்ரெய்லரை பார்க்கும்போது தெரிகிறது.. தனுஷ் வேறு ‘செஞ்சுருவேன்’ என அடிக்கடி எச்சரிக்கை விடுக்கிறார்.. ஆனாலும் படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு அனைவரும் பார்க்கும் வகையிலான ‘U’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். அதனால் வன்முறை எதுவும் இல்லாத வழக்கமான தனுஷ் படமாக இது இருக்கும் என நம்பலாம்.

இதுவரை இரண்டு காதல் படங்களை இயக்கிய பாலாஜி மோகன் இந்தப்படத்தின் மூலம் முழுக்க முழுக்க கமர்ஷியல் வளையத்திற்குள் வந்திருக்கிறார். தனுஷ் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ள மாரி’ படத்தை ராதிகா, சரத்குமார் மற்றும் லிஸ்டின் ஸ்டீபன் இணைந்து தயாரித்துள்ளனர். படம் வரும் ஜூலை-17ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.