டிச-21 ரிலீஸை உறுதி செய்த மாரி-2..!

maari2

இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் மாரி 2 . இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.சமீபத்தில் இப்படத்திலிருந்து ரௌடி பேபி என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதியை நடிகர் தனுஷ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

மாரி 2 படம் உலகம் முழுவதும் டிசம்பர் 21 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. மேலும் இப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று இருக்கிறது. இப்படத்தில் கதாநாயகியாக சாய்பல்லவி, வில்லனாக டோவினோ தாமஸ் மற்றும் முக்கிய வேடங்களில் வரலட்சுமி சரத்குமார், கிருஷ்ணா, ரோபோசங்கர், வினோத் போன்றவர்கள் நடித்துள்ளனர். தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார்.