நயன்தாரா நடித்த ஹாரர் த்ரில்லர் படமான ‘மாயா’வை தயாரித்ததன் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தது பொடன்ஷியல் நிறுவனம். மாயாவின் வெற்றியை தொடர்ந்து இந்த நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக உருவாகியுள்ள படம் ‘மாநகரம்’. இந்தப்படத்தில் ஹீரோக்களாக ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ புகழ் ஸ்ரீ, மற்றும் ‘யாருடா மகேஷ்’ படத்தில் நடித்த சந்தீப் கிஷன் ஆகியோர் நடித்துள்ளார்கள். கதாநாயகியாக ரெஜினா நடித்துள்ளார். குறும்பட இயக்குனரான லோகேஷ் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப்படத்தில் சார்லி, முனீஸ்காந்த், இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சென்னைக்கு பிழைப்பு தேடி வரும் நான்கு பேரை இந்த மாநகரம் எப்படி எதிர்கொள்கிறது என்பதை அடிப்படையாக வைத்து இந்தப்படம் ஆக்சன் த்ரில்லராக உருவாகியிருக்கிறது. இந்தப்படத்திற்கு இப்போது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் ‘UA’ சான்றிதழ் கிடைத்துள்ளது. வரும் மார்ச்-10ல் படத்தை ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்.