குறும்பட இயக்குனரின் ‘மாநகரம்’ ; ‘மாயா’ நிறுவனத்தின் அடுத்த படி..!

maanagaram
நயன்தாரா நடித்து மாபெரும் வெற்றிபெற்ற ஹாரர் படமான ‘மாயா’, புதியபாணி கதையை மக்கள் ரசனைக்கேற்ப வித்தியாசமாக புதியவர்களால் சரியான விகிதத்தில் கொடுத்தால், அதை மக்கள் வரவேற்பார்கள் என்பதை tதெள்ளத்தெளிவாக நிரூபித்தது. இந்த வெற்றியை தொடர்ந்து, இந்தப்படத்தை தயாரித்த பொடென்ஷியல் நிறுவனம் தனது இரண்டாவது படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

படத்தின் பெயர் ‘மாநகரம்’.. வெவ்வேறு ஊர்களில் இருந்து நான்கு பேர் சென்னை மாநகரத்திற்கு வேலை தேடி செல்கிறார்கள். நான்கு பேரும் மாநகரத்தை எப்படி பார்க்கிறார்கள், அவர்களின் எதிர்ப்பார்ப்பை அந்த மாநகரம் எப்படி உடைத்தெரிகிறது… அவர்களை எப்படி நடத்துகிறது என்பதே “மாநகரம்”

இந்த நான்கு பேராக ஸ்ரீ, சந்தீப் இஷன், சார்லி, ராமதாஸ் நடிக்கிறார்கள். நாயகியாக ரெஜினா நடிக்கிறார். படத்தில் நாயகிக்கு கதையோடு ஒன்றி பயணிக்கும் வகையிலான நல்ல கதாபாத்திரம் அமைந்துள்ளது. இந்த நான்கு பேர் கதையிலும் ஓர் உள்தொடர்பு இருந்து கொண்டே இருக்கும். அப்படி ஒரு “ஹைபர்லிங்” என்னும் புதுவித திரைக்கதையை த்ரில்லிங்காக அமைத்துள்ளார் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். குறும்பட இயக்குனரான இவரின் முதல் படைப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது..