‘மான் கராத்தே’வுக்கு ‘U’ சான்றிதழ்..!

தேர்வு விடுமுறையை குறிவைத்து சரியாக ஏப்ரல் முதல்வாரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மான் கராத்தே’யை களம் இறக்குகிறார் படத்தின் இயக்குனர் திருக்குமரன். சிவகார்த்திகேயனின் படத்திற்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு அனிருத்தின் இசையில் வெளியான பாடல்கள் மேலும் ஆவலை தூண்டியுள்ளது.

சமீபத்தில் இந்தப்படத்தை தணிக்கை குழுவினருக்கு போட்டுக்காட்டினார் இயக்குனர் திருக்குமரன். படத்தை பார்த்த அதிகாரிகள் படத்திற்கு ‘U’ சான்றிதழ் அளித்தனர். மேலும் படத்தில் இரட்டை அர்த்த வசனம், ஆபாசம், வன்முறை எதுவுமின்றி அருமையாக இயக்கியுள்ளதாக திருக்குமரனுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் இந்தப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் பட நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார்.