படிக்கும் மாணவர்கள் இணைந்து உருவாக்கியுள்ள ‘மையம்’ திரைப்படம்..!

 

இயற்கையையும், இயல்பான மனித அழகையும் ஒவிய வடிவில் வரைபவரான ஒவியரான ஸ்ரீதர், கடந்த வருடம் “ஸ்கெட்ச்புக் புரொடக்ஷன்ஸ்” எனும் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்தை இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் தான் துவக்கி வைத்தார். இந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக தற்போது ‘மய்யம்’ என்கிற படம் உருவாகியிருக்கிறது.

இதில் என்ன ஹைலைட் என்றால், இந்தப்படத்தின் இயக்குனர் முதல் அனைத்து டெக்னீசியன்கள் வரை தற்போது கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் படித்துக்கொண்டு இருக்கும் மாணவர்கள் என்பதுதான். எஸ்.ஆர்.எம் கல்லூரியில் நான்காம் ஆண்டு பொறியியல் படிக்கும் மாணவரான ஆதித்யா பாஸ்கரன் என்பவர் தான் இந்தப்படத்தின் இயக்குனர்.

ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி மகனான கே.ஆர் என்பவர் தான் இசையமைப்பாளர்.. இவர் ரஹ்மானின் கே.எம்.கன்சர்வேட்டரி இசைப்பள்ளி மாணவரும் கூட. இதைவிட ஆச்சர்யம் ஏவி.எம் மேல் நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும், வருணாஸ்ரீதர் என்கிற மாணவி தான் இந்தப் படத்தின் ஆடை வடிவமைப்பாளர் என்றால் நம்ப முடிகிறதா..? இந்தப் படத்தின் படப்படிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரடக்சன் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.