முறைப்படி பாட்டு எழுத கற்றுக்கொடுக்கிறார் பாடலாசிரியர் பிரியன்..!

இதுவரை தமிழ் சினிமாவில் இயக்கம், எடிட்டிங், ஒளிப்பதிவு, இசையமைப்பு போன்ற பல பிரிவுகளையும் கற்றுக்கொள்ளத்தான் படிப்புகள் உள்ளன. ஆனால், பாடல் எழுதுவதற்கென்று எந்தப் படிப்போ அதைக்கற்றுக்கொடுக்கும் பள்ளியோ இருந்தது இல்லை.

ஆனால் உலக வரலாற்றிலேயே முதல் முறையாக, முறைப்படி திரைப்பாடல் எழுதக் கற்றுக் கொள்வதற்காக ஒரு பயிற்சி நிறுவனத்தை ஆரம்பித்திருக்கிறார் பாடலாசிரியர் பிரியன். அதுதான் பாடலாசிரியர் அண்ணாமலை அவர்கள் துணையுடன் வெற்றிகரமாக இயங்கிவரும் ‘தமிழ்த் திரைப்பாக்கூடம்’ எனும் அமைப்பு..

இந்த அமைப்பு துவங்கப்பட்ட முதல் வருடத்திலேயே உச்சத்தைத் தொட்டுள்ளது. முதல் வருடத்தில் 25 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களில் பயிற்சிபெற்ற பலருக்கு இந்தப்படிப்பில் சேர்ந்த ஆறு மாதங்களில் பாடல் எழுதும் வாய்ப்பு கிடைத்து, தற்பொழுது திரைப்படங்களில் பாடல்கள் எழுதி உள்ளனர்.

தொடர் வெற்றிப்பாடல்களைத் தரும் முன்னணி இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி அவர்கள் நேரடியாக வகுப்பிற்கு வந்து, மாணவர்களோடு கலந்துரையாடி, சிறந்த பாடல்களை எப்படிப் படைப்பது என அறிவுரைகள் கூறி, தனது அடுத்தடுத்தப் படங்களில் நிச்சயம் இம்மாணவர்களை பயன்படுத்துவதாக உறுதி அளித்திருக்கிறார்.

விரைவில் அடுத்த வருடத்திற்கான மாணவர்களைத் தேர்ந்தெடுக்க இருக்கிறது. சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் வகுப்புகள் நட்த்தப்படும் இந்த ஒருவருட டிப்ளமோ படிப்பில் சேர்வதற்கு பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதும். கூடுதலாக கவிதை அல்லது பாடல் புனையும் ஆற்றல் பெற்றிருந்தால் இன்னும் சிறப்பு.. இதில் சேருவதற்கு வயது வரம்பு எதுவும் இல்லை.

இதில் சேர விரும்புவர்கள் கீழ்க்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம். 8056161139 , 9566196747

மின்னஞ்சல் : diplyric@gmail.com, diplyric.piriyan@gmail.com