நகரெங்கும் பிரமாண்ட பேனர்களால் கலக்கும் எல்கேஜி

lkg

காமெடி நடிகராக வலம்வந்த ஆர்ஜே.பாலாஜி இதுவரை தனது ஒன்லைனர் காமெடி வசனங்களால் ரசிகர்களை கவர்ந்து வந்தார். இந்த நிலையில் ஒரு முழு படத்தையும் தாங்கிப்பிடிக்கும் கதாநாயகனாக எல்கேஜி மூலம் புரமோசன் ஆகியுள்ளார்.

படத்தின் டிரைலர் வெளியான நாளிலிருந்தே சோசியல் மீடியா பற்றி எரிகிறது. பிரபு என்கிற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ள இந்த படம் முழுக்க முழுக்க அரசியல் நையாண்டி கலந்த படமாக உருவாகி உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்த படத்திற்கு, குறிப்பாக ஆர்ஜே.பாலாஜிக்கு பிரபல கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ் வாழ்த்து தெரிவிக்கிறார் என்றால் இந்த படம் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதை நாம் கணித்துக் கொள்ளலாம்.

வரும் பிப்-22ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் சென்னையில் ஆங்காங்கே மிக பிரம்மாண்டமான வகையில் இந்த படத்திற்காக பேனர்கள் வைக்கப்பட்டு வருவதை ரசிகர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கிறார்கள்