பிரமாண்டமாக நடந்த ‘லிட்டில் ஷோஸ்’ குறும்பட விருது விழா..!


ஐ சன் நிறுவனத்துடன் லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் ரவீந்திரன் இணைந்து லிட்டில் ஷோஸ் அவார்ட்ஸ் என்கிற குறும்பட விருது விழாவை நடத்திவருகிறார். இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் இந்த விழா நேற்று சேத்பட் லேடி ஆண்டாள் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள விழா அரங்கத்தில் நடைபெற்றது.

போட்டியில் கலந்துகொண்ட குறும்படங்கள் காலை முதல் சிறப்பு நடுவர்களுக்காக திரையிடப்பட்டு காட்டப்பட்டன. அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட குறும்படங்களுக்கு சிறந்த படம், ஒளிப்பதிவு, நடிகர், நடிகை, குணச்சித்திர கதாபாத்திரம் என பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த விழாவில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, நடிகர் ஷாம், குணச்சித்திர நடிகர் ஜெயபிரகாஷ், நகைச்சுவை நடிகர் சாம்ஸ், இயக்குனர்கள் மதன், கணேஷ்பாபு ஆகியோர் குறும்படங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்ததோடு இந்தப்போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மேலும் விழாவில் பார்வையாளர்களை மகிழ்விக்க பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. விழா நிகழ்ச்சிகளை நடிகர் விஜய் ஆதிராஜும் விஜய் டிவி ரம்யாவும் தொகுத்து வழங்கினர்.