மேமாதம் துவங்குகிறது லிங்குசாமியின் ‘சண்டகோழி-2’..!


‘செல்லமே’ என முதல் படத்தில் சாக்லேட் பையனாக அறிமுகமான விஷால் இன்று அதிரடியான ஆக்சன் ஹீரோவாக ஜொலித்து வருகிறார் என்றால், அந்த ஆக்சன் ஹீரோ இமேஜை ஏற்படுத்தி கொடுத்த படம் தான் லிங்குசாமியின் இயக்கத்தில் வெளியான ‘சண்டக்கோழி’. இந்த வெற்றிக்குப்பின் இருவரும் கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கழித்து மீண்டும் ‘சண்டக்கோழி-2’வில் இணைய இருக்கிறார்கள்..

இந்தப்படத்தின் படப்பிடிப்பை மே-1ல் ஆரம்பிக்க பிளான் வைத்திருக்கிறார் லிங்குசாமி. தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் நடித்துவரும் விஷாலின் அடுத்த ஸ்பாட் சண்டக்கோழி-2’ தான். பக்காவன ஆக்சன் பேக்கிங் கதையாக இதை தயார்செய்துள்ள லிங்குசாமி, விஷாலுக்கான ஜோடியை தேடுவதில் தற்போது மும்முரமாக இருக்கிறார்.