லிங்கா இசைவெளியீட்டு விழா – ஹைலைட்ஸ்..!

 

டிசம்பரில் சூப்பர்ஸ்டாரின் ‘லிங்கா’ வெளியாக இருப்பதற்கு அச்சாரம் போடும் விதமாக நேற்று அதன் இசைவெளியீட்டு விழா நடைபெற்றது. ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்துள்ள இந்தப்படத்தை கே.எஸ்.ரவிகுமார் இயக்கியுள்ளார். ரஜினிக்கு ஜோடியாக அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா நடிக்க நண்பர்களாக சந்தானமும் கருணாகரனும் நடித்துள்ளனர்.

இன்று நடைபெற்ற விழாவில் படத்தின் இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான் மட்டும் தான் மிஸ்ஸிங். மற்றபடி அனுஷ்கா, சோனாக்ஷி இருவருமே கலந்துகொண்டு ஆச்சர்யம் அளித்தனர். விழாவில் கலந்துகொண்து பேசிய ஷங்கர், “சிவாஜியில் பார்த்த ரஜினியை மீண்டும் லிங்காவில் பார்க்கிறேன்.. வேகமாக படமெடுப்பது பற்றி கே.எஸ்.ரவிகுமாரிடம் தான் கற்றுக்கொள்ளவேண்டும்” என பாராட்டினார்.

ஷங்கர் சொன்னதற்கு காரணம் இல்லாமல் இல்லை.. பீரியட் பிலிமான இந்தப்படத்தை மே மாதம் ஆரம்பித்து இதோ நவம்பரில் இசைவெளியீட்டு விழாவை நடத்தி, டிசம்பரில் படத்தை வெளியிடுவதா அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்துவிட்டார் என்றால் சாதாரண வேகமா அது?

விழாவில் பேசிய அமீர், சேரன், விஜயகுமார் உள்ளிட்டோர் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என வலியுறுத்த, இறுதியாக பேசிய ரஜினி இனிமேலும் ஆண்டவனை நோக்கி கைகாட்டுவதில் அர்த்தமில்லை.. அரசியலுக்கு வருவதற்கு பயமில்லை, தயக்கம் தான் காரணம்” என விளக்கம் அளித்தார்.