பர்ஸ்ட் லுக்குடன் பப்ளிசிட்டியை துவங்கிய ‘தீரன் அதிகாரம் ஒன்று’..!

dheeran athikaram onru

சிறுத்தை படத்துக்குப்பின் மீண்டும் கம்பீரமான காக்கி யூனிபார்மில் கார்த்தியை பார்க்கமுடியவில்லையே என்கிற ஏக்கம் ரசிகர்கள் பலருக்கும் இருக்கும்.. அந்த வருத்தத்தை போக்கும் விதமாக ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படஹ்தில் மிரட்டலான போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் கார்த்தி. ‘சதுரங்க வேட்டை’ படம் மூலம் கவனம் ஈர்த்த ஹெச்.வினோத் இந்தப்படத்தை இயக்கியுள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை இருமடங்காக்கி இருக்கிறது..

கார்த்திக்கு ஜோடியாக ராகுல் பிரீத் சிங் நடித்துள்ளார். ஜிப்ரான் இசையமைக்கும் இந்தப்படத்தில் அபிமன்யு சிங் வில்லனாக நடித்துள்ளார். இந்தப்படம் தீபாவளி ரிலீஸ் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது கார்த்தி-ராகுல் பிரீத் சிங் இருவரின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு பப்ளிசிட்டி பணிகளை துவங்கியுள்ளனர்.