திரையுலக பிரபலங்கள் பங்குகொள்ளும் லயோலா முன்னாள் மாணவர் மாநாடு..!

layola re unite students

இன்றைய தேதியில் அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்களின் கல்லூரி படிப்பு பெரும்பாலும் லயோலா கல்லூரியில் தான் இனிமையான நினைவுகளாக பதிந்திருக்கும்.. அந்தவகையில் லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் மாநாடு அடுத்தமாதம் அக்டோபர் 1 மற்றும் 2ஆம் தேதிகளில் நடக்கிறது.

மாணவர்களின் தேர்ச்சி விகிதம், மாணவர்கள் நடந்துகொள்ளும் விதம், கல்லூரியின் ஆராய்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளின் தரவரிசை பட்டியலில் லயோலா கல்லூரி இரண்டாம் இடம் பெற்றுள்ளது. சமூக பணிகளிலும் ஈடுபட்டுள்ளது

லயோலா கல்லூரி தனது நூற்றாண்டு விழாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த கல்லூரியில் படித்த மாணவர்கள் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வாழ்க்கையில் சாதனை படைத்தவர்களாக இருக்கிறார்கள். இந்த கல்லூரியில் படித்த 50க்கும் மேற்பட்டவர்கள் சினிமா துறையில் நடிகர்களாகவும், டைரக்டர்களாகவும், ஊடகதுறையிலும் உள்ளனர்.

அவர்கள் இந்த மாநாட்டில் கவுரவிக்கப்படுகிறார்கள். நடிகர்கல் பிரபு, ஜெயம்ரவி, விஷால் உட்பட பலர் கலந்துகொள்ள உள்ளார்கள். இரண்டாவது நாள் நிகழ்ச்சி அடுத்த நாள் காலை 10:30 மணிக்கு தொடங்குகிறது. இதில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொள்ள உள்ளார்கள். அவர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வர இருக்கிறார்கள்.