இந்தியிலும் காஞ்சனாவை இயக்கும் லாரன்ஸ்

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கி சூப்பர்ஹிட்டான ‘காஞ்சனா’ திரைப்படத்தின் மூன்றாவது பாகமான காஞ்சனா-3 கடந்தவாரம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. காஞ்சனா படத்தின் அடுத்தடுத்த படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ள நிலையில் காஞ்சனா-3யின் வெற்றியைக் கூட கொண்டாட நேரமில்லாமல் தற்போது இந்தியில் காஞ்சனா படத்தின் ரீமேக்கை இயக்குவதில் பிசியாக இருக்கிறார் ராகவா லாரன்ஸ்.

லக்ஷ்மி பாம் என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் லாரன்ஸ் நடித்த கேரக்டரில் அக்சய் குமாரும் சரத்குமார் நடித்த கேரக்டரில் அமிதாப் பச்சனும் நடிக்கிறார்கள்.