தியா’வாக உருமாறிய ‘கரு’ ; ஏப்-27ல் ரிலீஸ்..!

diya rilease date

லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் சுபாஷ்கரன் தயாரிப்பில், இயக்குனர் விஜய் இயக்கியிருக்கும் படம் ‘கரு’. சாய் பல்லவி, நாக சௌர்யா நடிப்பில், நிரவ் ஷா ஒளிப்பதிவில் உருவாகி இருக்கும் இந்த படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைத்திருக்கிறார். இந்தப்படத்தில் ‘தெய்வத்திருமகள்’ சாரா போல, பேபி வெரோனிகா என்பவர் ரசிகர்கள் உள்ளங்களை கொள்ளைகொள்ள வருகிறார்.

இப்போது விஷயம் என்னவென்றால் இந்தப்படத்தின் ‘கரு’ என்கிற டைட்டிலை தற்போது ‘தியா’ என மாற்றி வெளியிடுகிறார்கள். வரும் ஏப்-27ஆம் தேதி இந்தப்படம் ரிலீஸாகிறது.

இயக்குனர் விஜய் ஏற்கனவே வனமகன், அடுத்ததாக கரு இல்லையில்லை தியா என தனது இரண்டு படங்களின் ரிலீஸ் தேதிகளையும் முன்கூட்டியே அறிவித்தாலும், தயாரிப்பாளர் சங்க போராட்டம் காரணமாக, அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க இரண்டுமுறையும் முகம் சுளிக்காமல் தள்ளி வைத்தவர்.

அந்தவகையில் ‘தியா’ படத்திற்கு தற்போது ரிலீஸ் தேதியில் முன்னுரிமை கொடுத்து வரும் ஏப்-27ஆம் தேதி ரிலீஸ் செய்கிறார்கள்.