‘ஹவுஸ் ஓனர்’ ஆவதன் கஷ்டத்தை படமாக்குகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்

சமீபத்தில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் மும்பைக்கு சென்று இருந்தபோது ஒரு ஹிந்தி திரைப் படம் பார்க்க நேரிட்டதாம். அந்த படம் அவரை வெகுவாக கவர்ந்ததால், அந்த படத்தை தமிழில் தயாரிக்கலாம் என்று முடிவு செய்து அந்த படத்தின் தயாரிப்பாளரை சந்தித்து கேட்டாராம். ஆனால் சில பல காரணங்களால் அது நடக்கவில்லை.

அதற்காக அவர் அதை அப்படியே விட்டுவிடவும் இல்லை.. அந்த படம் பார்த்த பிறகு ஏற்பட்ட ஒரு உந்துதலால் ஒரு புதிய கதையை எழுதி முடித்து ‘ஹவுஸ் ஓனர்’ என்கிற பெயரில் படமாக இயக்க உள்ளாராம்.

ஒரு அன்பான இளைய தம்பதியினர் தங்களது கனவு இல்லத்தை வாங்க முயற்சிப்பது தான் படத்தின் மைய கரு. இதை நகைச்சுவை இழையோட மென்மையாக சொல்லப்போகிறாராம் லட்சுமி ராமகிருஷ்ணன். அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணையாக நடிக்கவுள்ள இந்தப்படத்திற்கு ஜோமோன் டி ஜான் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளதாம்.