லட்சுமிராய், விசாகா – பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

‘கற்க கசடற’ மூலம் தமிழ்சினிமாவில் அறிமுகமாகி சினிமாவின் இலக்கணங்களை கசடற கற்றவர் லட்சுமிராய். ஆறடி அரபுக்குதிரையான லட்சுமிராய் ‘காஞ்சனா’, ‘மங்காத்தா’ படங்களின் மூலம் ரசிகர்களை கிறங்கடித்த பெருமைக்குரியவர். தற்போது ‘இரும்பு குதிரை’ படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்து வருகிறார் லட்சுமிராய்.

‘பிடிச்சிருக்கு’ படத்தில் அமைதிப்பெண்ணாக அறிமுகமானாலும் விசாகாவை ரசிகர்களிடம் கொண்டுபோய் சேர்த்தது என்றால் அது ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படம் தான். அமைதியும் அழகும் ஒன்றாக நிரம்பிய மாடல் அழகியான விஷாகா தற்போது சந்தானத்துடன் ‘வாலிபராஜா’ படத்தில் நடித்துவருகிறார் என்றாலும் இந்திப்படங்களில் தான் அதிகமாக நடித்துவருகிறார்.

அதிசயத்திலும் அதிசயமாக இவர்கள் இருவருக்கும் இன்று ஒரே நாளில் பிறந்தநாள் அமைந்திருக்கிறது. இன்று பிறந்தநாள் காணும் இவர்கள் இருவருக்கும் behind frames’ தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.