விஜய்சேதுபதி ஜோடியாக லட்சுமி மேனன்..!

laksmi menon - vijay sethupathi

வேதாளம், மிருதன் படங்களை தொடர்ந்து லட்சுமி மேனனின் படம் எதுவும் வெளியாகாததால் அவருக்கு படங்களே இல்லை என நினைத்துவிட வேண்டாம். செலக்டிவான படங்களை மட்டுமே ஒப்புக்கொள்ளும் லட்சுமி மேனன், அடுத்ததாக விஜய் சேதுபதியுடன் இணைந்து ‘றெக்கை’ என்கிற படத்தில் ஜோடியாக நடிக்கவுள்ளார்.

ஏற்கனவே, ஜிகர்தண்டா படத்தில் இருவரும் நடித்திருந்தாலும் இருவரும் சேர்ந்துவரும் காட்சிகள் அதில் இடம்பெறவில்லை. அந்தக்குறையை இந்தப்படம் போக்கும். இன்னும் வெளிவராத ‘வா டீல்’ படத்தை இயக்கிய ரத்தினசிவா இந்தப்படத்தை இயக்குகிறார்.