லட்சுமி மேனனின் மனக்குறை தீர்த்த ‘நாய்கள் ஜாக்கிரதை’ இயக்குனர்..!

“கிராமத்துப்பெண், பக்கத்து வீட்டுப்பெண் மாதிரி என்று சொல்லிக்கொண்டு என்னை தாவணி கட்ட மட்டும் சொல்லிவிடாதீர்கள்” என கதை சொல்ல வருபவர்களுக்கு ஒரு பெரிய கும்பிடு போடும் அளவுக்கு வந்துவிட்டார் லட்சுமி மேனன். அந்த அளவுக்கு தன்னை தேடிவந்த கிராமத்து கேர்க்டர்களால் நொந்துபோன லட்சுமி மேனன் நடிப்பையே நிறுத்திவிடப்போவதாக கூட செய்திகள் வர ஆரம்பித்தன.

ஆனால் அவரது மனக்குறை தீர்க்கும் விதமாக, ‘நாய்கள் ஜாக்கிரதை’ வெற்றிப்படத்தின் இயக்குனர் சக்தி சௌந்தரராஜன், தற்போது ஜெயம் ரவியை வைத்து தான் இயக்கும் படத்தில் அல்ட்ரா மாடர்ன் கேர்ள் கேரக்டர் கிடைத்திருக்கிறது. அதேசமயம் அஜித்துக்கு தங்கையாக நடிக்க தன்னை அழைத்தார்கள் என்கிற உண்மையை ஒப்புக்கொண்டுள்ள லட்சுமி மேனன், தான் அதில் நடிக்கவில்லை என்றும் மறுத்துள்ளார்.