‘ஜெமினி கணேசன்’ ஜோடியாக லட்சுமி மேனன்..!

jeeva - Lakshmi Menon
தங்கச்சியாக நடித்தால் மவுசு குறைந்துவிடும என லட்சுமி மேனனை பயம் காட்டினார்கள்.. ஆனால் அவரோ துணிந்து ஒப்புக்கொண்டு அஜித்தின் தங்கையாக ‘வேதாளம்’ படத்தில் தைரியமாகவும் நடித்தார். படத்தில் நாயகியாக நடித்த ஸ்ருதிஹாசனை விட, லட்சுமிமேனனின் கதாபாத்திரத்திற்கு தான் பாராட்டுக்கள் குவிந்தன.

அதேபோல மீண்டும் நாயகி வாய்ப்புகளும் நிறைய தேடி வருகின்றன. அந்தவகையில் ‘ஜெமினி கணேசன்’ என்கிற படத்தில் முதன்முறையாக ஜீவாவுக்கு ஜோடியாக ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் லட்சுமி மேனன். இந்தப்படத்தை முத்துக்குமார் என்பவர் இயக்குகிறார்.. படத்தின் டைட்டிலுக்கு ஏற்றமாதிரி காதல் மன்னனாக நடிக்கிறாராம் ஜீவா.