‘குற்றம்-23’ தயாரிப்பாளருடன் இணைந்த ‘தடையற தாக்க’ கூட்டணி..!

arunvijay new film

கடந்த மாதம் அருண்விஜய் நடிப்பில் வெளியான குற்றம் 23 திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. ஹீரோவாக அருண் விஜய்க்கு சிறந்த கம் பேக் என ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். எனவே தனது அடுத்த படத்தை தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார் அருண் விஜய். ‘குற்றம்-23’ படத்தை தயாரித்த இந்தர்குமாரே அருண்விஜய்யை வைத்து அடுத்த படத்தை தயாரிப்பதாக அறிவித்திருந்தார்.

ஏற்கனவே ‘தடையற தாக்க’ படத்தின் இயக்குனர் மகிழ்திருமேனியுடன் அருண்விஜய் மீண்டும் ஒரு படத்தில் இணையபோவதாகவும் தகவல் வெளியானது. இப்போது இந்த இரண்டு தகவல்களும் உறுதி செய்யப்பட்டு இறுதி வடிவம் கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் இந்தர்குமார். ஆம்.. மீண்டும் மகிழ்திருமேனி டைரக்சனில் அருண்விஜய் நடிப்பது இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே ஹிட்டடித்த ‘தடையற தாக்க’ படத்தை ரசித்து பார்த்தவர்களுக்கு இன்னொரு ஸ்பெஷல் ட்ரீட்டாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.