‘குற்றம் 23’ ; நிதானம் காட்டிய அருண்விஜய்..!

Kuttram-23-Arun-Vijay

‘என்னை அறிந்தால்’ படத்தை தொடர்ந்து அருண்விஜய் நடிப்பில் வெளியாகும் திரைப்படம் ‘குற்றம் 23’.. என்னை அறிந்தால் படத்தின் விக்டர் கதாபாத்திரம் அருண்விஜய் மீதான எதிர்பார்ப்பை முற்றிலும் வேறு கோணத்தில் கொண்டுசென்றுள்ளது என்பதாலேயே இந்தப்படத்தை சரியான நேரத்தில் வெளியிடுவதற்காக நிதானம் காட்டி வந்தார் அருண்விஜய்.. அதன்படி இந்தப்படம் மார்ச்-3ல் ரிலீஸாகிறது. இந்தப்படத்தை அக்ராஸ் பிலிம்ஸ் பிரபு வெங்கடாச்சலம் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.

அருண்விஜய் முதன்முதலாக போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார் என்பது ஹைலைட்டான விஷயம்.. க்ரைம் கதை மன்னன் ராஜேஷ்குமாரின் ஒரு நாவலில் உள்ள கருவை மையப்படுத்தி, மெடிக்கல் க்ரைம் ஆக்சன் த்ரில்லராக இந்தப்படம் உருவாகியுள்ளது. ‘ஈரம்’ அறிவழகன் இயக்கியுள்ள இந்தப்படத்தின் கதாநாயகியாக மஹிமா நம்பியார் நடித்துள்ளார். விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.