‘குற்றம்-23’ இசைவெளியீட்டு விழா ; கௌதம் மேனன் நேரில் வாழ்த்து..!

kuttram-23-audio-launch

அருண்விஜய் முதன்முதலாக போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ள படம் ‘குற்றம்-23’. க்ரைம் கதை மன்னன் ராஜேஷ்குமாரின் ஒரு நாவலில் உள்ள கருவை மையப்படுத்தி, மெடிக்கல் க்ரைம் ஆக்சன் த்ரில்லராக இந்தப்படம் உருவாகியுள்ளது. ‘ஈரம்’ அறிவழகன் இயக்கியுள்ள இந்தப்படத்தின் கதாநாயகியாக மஹிமா நம்பியார் நடித்துள்ளார்.

விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.. கடந்த இரண்டு தினங்களாக கார் விபத்து சர்ச்சையில் சிக்கிய அருண்விஜய், இந்த விழாவில் முதல் ஆளாக கலந்துகொண்டு வந்திருந்த அனைவரையும் சிரித்த முகத்துடன் வரவேற்றது ஆச்சர்யமான விஷயம்.

இந்த விழாவில் திரையுலக பிரபலங்கள் பலர் வந்திருந்து படக்குழுவினரை வாழ்த்தினார்கள். குறிப்பாக அருண்விஜய்யின் சினிமா வாழ்க்கையில் அவ்வப்போது திருப்பாத ஏற்படுத்திய முக்கியமான இயக்குனர்களான எஸ்.பி.ஜனநாதன், மகிழ்திருமேனி, கௌதம் மேனன் ஆகியோர் நேரில் வந்து வாழ்த்தியது தான் ஹைலைட்..

“என்னைப்பொறுத்தவரை ஒரு நடிகனை வைத்து எல்லா சோதனை முயற்சிகளையும் பண்ணி பார்க்கலாம் என்றால் அப்படிப்பட்ட ஒரே நடிகர் அருண் விஜய்தான்” என்றார் கௌதம் மேனன். ஜெயம் ரவி, பரத், ஸ்ரீகாந்த் என இளம் நடிகர்களும் அருண் விஜய்யை பார்த்து தாங்கள் போராட கற்றுக்கொண்டதாக கூறினார்கள்.