‘குற்றம் 23’ விழாவுக்கு வர ‘பல்பு’ வாங்கிய ஜெயம் ரவி..!

jayam ravi

திரைப்பட விழாக்களில் தான் பல சுவாரஸ்யமான விஷயங்களை திரையுலக பிரபலங்கள் தாங்களாகவே கொட்டுவார்கள். அந்தவகையில் நேற்று நடைபெற்ற ‘குற்றம் 23’ படத்தின் இசைவெளியீட்டில் கலந்துகொண்ட பிரபலங்களில் நடிகர் ஜெயம் ரவி தான் இந்த விழாவில் கலந்துகொள்ள வந்த விதத்தை பகிர்ந்துகொண்டார்.

“இன்றைக்கு எனக்கு ஷூட்டிங் இருக்குன்னு முன்னாடியே சொல்லிட்டாங்க.. அதேசமயம் அருண்விஜய் அண்ணாவோட ஆடியோ ரிலீஸுக்கும் போகணும்.. ஏதாவது ஒரு பிளான் பண்ணி போயே ஆகணும்.. காய்ச்சல்னு சொல்லி மட்டம் போடலாமா..? கால்ல அடி பட்ருச்சுன்னு போய் சொல்லலாமா அப்படின்னு பலவிதமா யோசிச்சேன்..

கடைசில, சரி.. டைரக்டர்கிட்ட உண்மையை சொல்லியே பெர்மிஷன் வாங்கிருவோம்னு, நேத்து நைட்டு கூப்பிட்டு விஷயத்தை சொன்னேன்.. அவரு உடனே “தாராளமா போயிட்டு வாங்க ரவி.. ஷூட்டிங் இன்னைக்கு நைட் ஷெட்யூல் தானே” அப்படிங்கிறார் கூலா.. அடப்பாவிகளா ஷூட்டிங் எப்ப நடக்குதுன்னு கூட தெரியாம இதுக்காக பெரிய பில்டப் பண்ணி திட்டமெல்லாம் போட்டு இப்படி பல்பு வாங்கிட்டுத்தான் இந்த விழாவுக்கு வந்திருக்கேன்” என்றார் ஜெயம் ரவி..