‘குற்றமே தண்டனை’ பட ட்ரெய்லரை வெளியிட்ட நாசர்-விஷால்..!

Kuttrame Thandanai Trailer Release

தனுஷ்-வெற்றிமாறன் தயாரிப்பில் உருவான ‘காக்கா முட்டை’ என்கிற அழுத்தமான அழகியலான படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மணிகண்டன். கடந்த வருடங்களில் வெளியான மிகச்சிறந்த படங்களில் முதலாவது இடத்தை ‘காக்க முட்டை’ படத்துக்கு தாராளமாக கொடுக்கலாம்.

அப்படிப்பட்ட இயக்குனரின் அடுத்த படமாக உருவாகியுள்ளது ‘குற்றமே தண்டனை’’.. விதார்த் மற்றும் ‘இறைவி’யில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய பூஜா தேவாரியா, ரகுமான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். விரைவில் ரிலீஸாக இருக்கும் இந்தப்படத்தின் ட்ரெய்லரை நடிகர்சங்க முக்கிய நிர்வாகிகளான நாசர், விஷால், பொன்வண்ணன் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ளனர்.