‘குரங்கு பொம்மை’யின் குரலுக்கு இப்போ சொந்தக்காரரான யுவன்சங்கர் ராஜா..!

Kurangu bommai

இயக்குநர் இமயம்” பாரதிராஜா – விதார்த் இணைந்து நடிக்கும் படம் ‘குரங்கு பொம்மை’. இப்படத்தை நாளைய இயக்குனரில் வெற்றி பெற்ற நித்திலன் இயக்கி இருக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக டெல்னா டேவிஸ் நடித்திருக்கிறார். மேலும் பி.எல்.தேனப்பன், குமரவேல், கஞ்சா கருப்பு, பாலாசிங், கிருஷ்ணமூர்த்தி, ரமா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி வெளியிட்டார். மேலும் அனிமேஷன் போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டார். இப்போது இந்தப்படத்தின் இசை உரிமையை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, தனது யு 1 ரெக்கார்ட்ஸ் மூலம் பெற்றுள்ளார்.

யுவன் இசை உரிமையை பெற்றது ‘குரங்கு பொம்மை’ படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதற்கேற்றாற்போல் இந்தப்படத்தின் இசை விரைவில் வெளியாகவுள்ளது. ஒரு நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் இடையே இருக்கும் நட்பை கதைக்கருவாக வைத்து உருவாகியுள்ள இந்தப்படம், அப்பா, மகனுக்கும் இடையேயான ஒரு பாசத்தையும் அழுத்தமாக சொல்லியிருக்கிறதாம்.