இப்படில்லாம் பேசாதப்பா ; விதார்த்துக்கு பாரதிராஜா அறிவுரை..!

kurangu bommai thanks meet

சமீபத்தில் வெளியான குரங்கு பொம்மை படத்தின் வெற்றி விதார்த்திற்கு உற்சாகத்தை தந்துள்ளது.. இந்தப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக பாரதிராஜாவுக்கு தேசியவிருது உட்பட பல விருதுகள் கிடைக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. அதனால் இந்தப்படத்தின் வெற்றிக்காக நன்றி சொல்லும் விதமாக பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர் பாரதிராஜா, விதார்த் உள்ளிட்ட ‘குரங்கு பொம்மை’ குழுவினர்.

அப்போது உணர்ச்சிவசப்பட்டு பேசிய விதார்த், இதற்குமுன் தான் தயாரித்த படங்களினால் ஏற்பட்ட நட்டத்தை அடைக்க தனது காரைக்கூட விற்றதையும், பாரதிராஜா தனது அடுத்த படத்தில் தன்னை நடிக்க ஒப்பந்தம் செய்து கொடுத்த சம்பளத்தில் தான் கடனை அடைத்ததாகவும் நெகிழ்ச்சியுடன் கூறினார்..

இதைத்தொடர்ந்து பேசவந்த பாரதிராஜா, “விதார்த் இந்த மாதிரி மேடையில ஒப்பனா பேசாதப்பா.. நமக்குள் இருக்கும் போருல்லாதர கஷ்டங்களை வெளியில் காட்டாத வரைக்கும் தான் இந்த உலகம் நம்மை மதிக்கும்.. அதனால் எப்போது உள்ளங்கையை மூடி வைத்ததுபோல நிறைய விஷயங்களை வெளியில் சொல்லாமலேயே இருந்துவிடு” என அறிவுரை கூறினார்.