ஜி.வி.பிரகாஷ் பிறந்தநாளில் ‘குப்பத்து ராஜா’ சிங்கிள் டிராக் ரிலீஸ்..!

நடன இயக்குநர் பாபா பாஸ்கர் திரைப்பட இயக்குநராக அறிமுகமாகவுள்ள படம் ‘குப்பத்து ராஜா’. ஜி.வி.பிரகாஷ், பார்த்திபன், பூனம் பாஜ்வா, பல்லக் லால்வானி, எம்.எஸ்.பாஸ்கர், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷே இசையமைப்பாளராக பணிபுந்துள்ளார்.

பக்கா ஆக்சன் படமாக உருவாகியுள்ள அன்பறிவு மற்றும் திலீப் சுப்புராயன் ஆகியோர் சண்டை இயக்குநர்களாக பணிபுரிந்துள்ளார்கள். இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துள்ள நிலையில் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்தப்படத்தின் ‘எங்க ஏரியா எங்களுது’ என்கிற சிங்கிள் டிராக்கை ஜி.வி.பிரகாஷின் பிறந்த நாளான ஜூன்-13ஆம் தேதி வெளியிட இருக்கிறார்கள்.