அடுத்தடுத்து கிருஷ்ணாவின் 2 படங்கள் ரிலீஸ்..!

yakkai-pandigai

சரியாக ஒன்றரை வருடங்களாக நடிகர் கிருஷ்ணாவின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை.. ஆனால் தற்போதோ அவர் கைவசம் ஐந்து படங்கள் இருக்கின்றன.. அவற்றில் இரண்டு படங்கள் ரிலீசுக்கு தயார் நிலையில்.. இன்னும் சில போஸ்ட் புரொடக்சன் பணிகளில்.. அப்படியானால் என்ன நடக்கும்..? யெஸ். நீங்கள் யூகித்தது போலத்தான்..

கிருஷ்ணா நடித்துள்ள ‘யாக்கை’ மார்ச்-3ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது., ‘பண்டிகை’ படம் மார்ச்-10ஆம் தேதியில் வெளியாவதாக சொல்லப்பட்டு வருகிறது.. ஒருவேளை இன்னும் ஒருவாரம் தள்ளிப்போகவும் வாய்ப்பு இருக்கிறது. எது எப்படியோ கிருஷ்ணாவின் படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன..

‘யாக்கை’ படத்தை ‘ஆண்மை தவறேல்’ பட இயக்குனரான குழந்தை வேலப்பன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக சுவாதி நடித்துள்ளார். ‘பண்டிகை’ படத்தை அறிமுக இயக்குனர் பெரோஸ் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ‘கயல்’ ஆனந்தி நடித்துள்ளார்.. நடிகை விஜயலட்சுமி தயாரித்துள்ளார்.

இரண்டு படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாவது இரண்டு படங்களுக்கும் நல்லதாக முடியுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். சமீபத்தில் இப்படித்தான் நடிகர் லாரன்ஸ் நடித்த இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாவதாக அறிவிப்பு வெளியானது.. அதன்பின் அடுத்த வாரங்களில் என சொல்லப்பட்டது.. ஆனால் இன்னும் இரண்டு படங்களும் ரிலீஸாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.