கிருஷ்ணாவுக்கு வெற்றி மகுடம் சூட்டியது ‘யாமிருக்க பயமே’

எவ்வளவுதான் நல்லபடமாக இருந்தாலும் ஒரு படம் ரிலீஸ் செய்வதற்கு ஏற்ற சரியான நேரம் அமையவேண்டும். அப்படி ஒரு ஜாக்பாட் தான் இப்போது கிருஷ்ணா நடித்த ‘யாமிருக்க பயமே’ படத்திற்கும் அடித்திருக்கிறது.

படம் கலகலப்பான காமெடி த்ரில்லர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதற்கேற்ற மாதிரி கோச்சடையான் ரிலீஸ் தள்ளிப்போனதில் நிறைய தியேட்டர்கள் கிடைக்க படம் சூப்பராக பிக்கப் ஆகியுள்ளது. இந்தவாரம் இன்னும் கூடுதலாக நாற்பது திரையரங்குகளிலும் இந்தப்படத்தை திரையிட்டிருக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல மாயாஜாலில் 11 காட்சிகள் அதிகரித்திருக்கிறார்கள். ஏவி.எம் ராஜேஸ்வரியில் தினசரி இரண்டாக இருந்ததை நான்கு காட்சிகளாக மாற்றியிருக்கிறார்கள். சென்னையில் மட்டும் பாக்ஸ் ஆஃபீஸில் ரூ1.93 கோடி வசூலை கல்லா கட்டியுள்ளது.

தமிழ்நாடு முழுதும் இதுவரை ரூ5.22 கோடி வசூலித்திருக்கிறது. இதுவரை வெளியான கிருஷ்ணாவின் படங்களிலேயே இதுதான் அதிக அளவிலான வசூலை அள்ளியிருக்கும் படம் என்கிறது வினியோகஸ்தர்கள் தரப்பு. சந்தோஷத்தில் இருக்கிறார் கிருஷ்ணா.