கூட்டத்தில் ஒருத்தன் குழுவினர் சிவகார்த்திகேயனுக்கு செய்த மரியாதை..!

Kootathil-Oruthan-sivakarthikeyan

அசோக் செல்வன், ப்ரியா ஆனந்த் நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கூட்டத்தில் ஒருத்தன்’ படம் வரும் ஜூலை-28ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்தநிலையில் படக்குழுவினர் முழுமூச்சாக படத்தின் புரமோசன் நிகழ்சிகளில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் சிவகார்த்திகேயனுக்கு மரியாதை செய்யும் விதமாக இரண்டு நிமிட ஆல்பம் ஒன்றையும் உருவாக்கி வெளியிட்டுள்ளனர்.. எதற்கு சிவகார்த்திகேயனுக்கு மரியாதை என்கிற கேள்வி எழலாம். இந்தப்படத்தின் கதை வகுப்பில் மிடில் கிளாஸ் பெஞ்ச் மாணவன் ஒருவனின் கதை தான்..

நடிகர் சிவகார்த்திகேயனும் அப்படி ஒரு மிடில் பெஞ்ச் ஸ்டூடன்ட்டாக இருந்து, ஸ்டேன்ட் அப் காமெடியனாக மாறி, சினிமாவில் கிடைத்த சின்னச்சின்ன வாய்ப்புகளில் தனது திறமையை நிரூபித்து, இன்று முன்னணி நாயகனாக வளர்ந்துள்ளார். இந்தப்படத்தின் கதாநாயகனும் அப்படி ஒரு கேரக்டர் என்பதால், அவரது இந்நாள் வரையிலான பயணத்தை இரண்டு நிமிட வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.