இன்றுமுதல் திரையரங்குகளில் உலாவருகிறான் ‘கொம்பன்’..!

காய்த்த மரம் தான் கல்லடி படும் என்பது போல, இதுவரை எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காத கார்த்தி நடித்த படத்தின் மீதே அவதூறுகளை சிலர் கிளப்பியது அவர்களின் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியைத்தான் காட்டுவதாக இருக்கிறது… தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவே “இந்தப்படம் முதலில் மார்ச்-27ல் ரிலீஸ் என அறிவித்தபோது இவ்வளவு எதிர்ப்பு இல்லை.. அதேபோல ஏப்ரல்-1௦ஆம் தேதி ரிலீஸ் என அறிவித்திருந்தாலும் இந்த அளவுக்கு பிரச்சனைகள் இருந்திருக்காது” என வருத்தப்பட்டுள்ளார்.

அப்படியானால் ஜாதி மோதல் கதை என்கிற பேச்சு எல்லாம் சும்மா தான், படம் ஏப்ரல்-2ஆம் தேதி வெளியாவது தான் பிரச்சனைக்கு அடிநாதம் என்பதை ஓரளவு யூகித்துக்கொண்ட ஸ்டுடியோ கிரீன், மேலும் இதை வளர்த்த விரும்பாமல், ஒருநாள் முன்கூட்டியே, அதாவது இன்றே கொம்பன் படத்தை ரிலீஸ் செய்துள்ளனர். நாளை உதயநிதியின் ‘நண்பேன்டா’ மற்றும் கேப்டன் மகன் சண்முகபாண்டியன் நடித்துள்ள ‘சகாப்தம்’ ஆகியவை ரிலீஸாக இருக்கின்றன.