முந்திகொண்டு வருகிறான் ‘கொம்பன்’.. !


ஆம். ‘கொம்பன்’ பட ரிலீஸ் ஏப்ரல்-2ஆம் தேதி என ஏற்கனவே சொல்லியிருந்தார்கள் தான். ஆனால் நல்ல நேரம் மார்ச்-27ல் அல்லவா கூடிவந்திருக்கிறது கார்த்தியின் படத்தை ரிலீஸ் செய்ய. அதனால் என்ன ஒரு வாரம் முன்கூட்டியே வெளியாவது சந்தோஷமான விஷயம் தானே..

தவிர ஏப்ரல்-2ல் கமலின் ‘உத்தம வில்லன்’ மற்றும் உதயநிதியின் நன்பேண்டா’ என இரண்டு படங்கள் ரிலீஸாக உள்ளதும் ‘கொம்பன்’ முந்துவதற்கு ஒரு காரணம்.. ஆனால் கொம்பன் ரிலீஸ் தேதியில் சிம்புவின் ‘வாலு’வும் ரிலீஸாக இருப்பதால் போட்டி கொஞ்சம் டப் ஆகவே இருக்கும் என தெரிகிறது..

ராமநாதபுரம் மாவட்ட பின்னணியில் நிகழும் கதைக்களத்தில் லட்சுமி மேனன் கதாநாயகியாக நடிக்க, கார்த்தியின் மாமனாராக ராஜ்கிரண் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். இதுவரை தமிழ்சினிமா அவ்வளவு அதிகமாக தொடாத ஏரியாவான மாமனார்-மருமகன் பாசத்தை காட்ட இருக்கிறது இந்த ‘கொம்பன்’. வேல்ராஜ் ஒளிப்பதிவை கவனிக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.