தமிழ்நாட்டில் மட்டும் 5 நாட்களில் 21 கோடி வசூலித்த கொம்பன்..!

தடைகளாக வந்த திருஷ்டியெல்லாம் கழிந்தது என்று சொல்வது போல ‘கொம்பன்’ படம் முதல் நாள் திரையிட்ட தியேட்டர்களை விட அதிக தற்போது தியேட்டர்களில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. எந்த ஏரியாவில் பிரச்சனைகளை கிளப்பும் என இந்ததப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் சொன்னார்களோ, அங்கேதான் வண்டி கட்டிக்கொண்டு கூட்டம் கூட்டமாக வந்து படத்தை பார்க்கிறார்கள் கிராமத்து மக்கள்.

படம் வெளியான ஐந்து நாட்களில் கேரளா, கர்நாடக, எப்.எம்.எஸ், சாட்டிலைட் ரைட்ஸ் என மற்ற வருமானத்தை எல்லாம் சேர்க்காமல் தமிழ்நாட்டில் மட்டும் 21 கோடி வசூலித்து தன்னை எதிர்த்தவர்களின் முகத்தில் கரியை பூசியுள்ளான் ‘கொம்பன்’. உறவுகளை மட்டுமே வைத்து எனக்கு படம் எடுக்கத்தெரியும் என்று சொன்ன இயக்குனர் முத்தையாவிற்கு அந்த உறவுகளே இப்போது கைகொடுத்துள்ளார்கள்.