மார்ச்-5ல் கொம்பன் ஆடியோ ரிலீஸ்..!

‘மெட்ராஸ்’ தந்த வெற்றியின் உற்சாகத்தில் இருக்கும் கார்த்தியை வைத்து ‘குட்டிப்புலி’ முத்தையா இயக்கியுள்ள படம் தான் ‘கொம்பன்’. ராமநாதபுரம் மாவட்ட பின்னணியில் நிகழும் கதைக்களத்தில் லட்சுமி மேனன் கதாநாயகியாக நடிக்க, கார்த்தியின் மாமனாராக ராஜ்கிரண் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்.

இதுவரை தமிழ் சினிமா அவ்வளவு அதிகமாக தொடாத ஏரியாவான மாமனார்-மருமகன் பாசத்தை விலாவாரியாக விவரிக்க இருக்கிறது இந்த ‘கொம்பன்’. வேல்ராஜ் ஒளிப்பதிவை கவனிக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மார்ச்-5ஆம் தேதி நடைபெற இருக்கிறது. படத்தை ஏப்ரல்-2ஆம் தேதி ரிலீஸ் செய்கிறார்கள்.