மலையாள இயக்குனர்களை ஈர்க்கும் கோலிவுட்..!

மலையாளத்தில் 39 படங்களை இயக்கியவர் பிரபல இயக்குனரான அணில் குமார். மலயாளத்தில் உள்ள முன்னணி நடிகர்கள் பலரையும் இயக்கிய இவர் தனது படத்தை தமிழில் இயக்கியிருப்பது ஆச்சர்யமான விஷயம் என்றால் அதனை தயாரிக்க முன் வந்திருக்கும் சசி நம்பீஷனும் சேர்ந்து நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார்.

படத்தின் பெயர் ‘சேர்ந்து போலாமா’.. வினய் கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில் மதுரிமா கதாநாயகியாக நடிக்க தலைவாசல் விஜய், தம்பிராமையா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பை முழுக்க முழுக்க நியூசிலாந்தில் நடத்தியிருக்கிறார்கள்.. இந்தப்படத்தின் ஸ்கிரிப்ட்டை ரவி மாத்யூ என்பவர் எழுதியிருக்கிறார். சமீபத்தில் இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவை சென்னையில் கொண்டாடினார்கள்.