கொளஞ்சி ட்ரெய்லரை டிவிட்டரில் வெளியிடுகிறார் சமுத்திரக்கனி..!

Kolanji

‘மூடர்கூடம்’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் நவீன் தயாரிப்பில் தனராம் சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் ‘கொளஞ்சி’. படத்தில் சமுத்திரகனி, சங்கவி ஆகியோர் நடித்துள்ளனர். “கொளஞ்சி” படத்தில் நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இப்படத்தின் ஒரு பாடலை யுகபாரதியும் மற்ற பாடல்களை தயாரிப்பாளர் நவீனும் எழுதியுள்ளனர். நடராஜன் சங்கரன் இசையமைத்துள்ளார்.

இந்தப்படத்தின் இசை வெளியீடு நாளை சூரியன் எப்.எம்மில் நடக்கவுள்ளது. மேலும் இப்படத்தின் முன்னோட்டத்தை சமுத்திரகனி அவரின் ட்விட்டர் தளத்தில் நாளை வெளியிடுகின்றனர். இப்படத்தின் “தமிழன் டா” பாடல் ஏற்கனவே சமீபத்தில் யூடியூப் தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பிடத்தக்கது..