‘கொடிவீரன்’ படப்பிடிப்பு கோலாகலமாக துவங்கியது..!

kodiveeran shootting starts

சசிகுமார் நடித்த ‘குட்டிப்புலி’ படத்தி இயக்கியதன் மூலம் இயக்குனராக அடி எடுத்து வைத்தவர் இயக்குனர் முத்தையா.. அதை தொடர்ந்து கொம்பன், மருது ஆகிய படங்களை இயக்கினார் முத்தையா.. ‘மருது’ படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெற தவறியதால் அடுத்த படத்தில் வலுவான ஸ்கிரிப்ட்டுடன் களமிறங்க காத்திருந்த முத்தையாவுக்கு மீண்டும் சசிகுமார் படத்தையே இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

‘கொடிவீரன்’ என தலைப்பிடப்பட்டுள்ள இந்தப்படமும் வழக்கம்போல முத்தியாவின் ட்ரெட் மார்க்கான மண்மணம் கமழும் படமாக இருக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.. படத்தின் கதாநாயகிகளாக மகிமா நம்பியார் மற்றும் சனுஷா இருவரும் நடிக்கின்றனர். இந்தப்படத்தின் படப்பிடிப்பு இன்றுமுதல் துவங்கியுள்ளது.