கோடிட்ட இடங்களை நிரப்ப பார்த்திபனுக்கு உதவும் சிம்ரன்..!

simran_1
செலக்டிவான கேரக்டர்களில் மட்டுமே சிம்ரன் நடிக்கிறார் என்பது கடந்த இரண்டு வருடங்களில் அவர் நடிப்பில் வெளியான மூன்று படங்களை வைத்தே தெரிந்துகொள்ளலாம். கடைசியாக ‘த்ரிஷா இல்லைனா நயன்தாரா’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் இப்போது பார்த்திபன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ என்கிற படத்தில் நடிக்கிறார்.

கொஞ்ச நேரமே வந்துபோகும் கேரக்டர்தான் என்றாலும் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர் என்பதால் இதை சிம்ரன் செய்தால் தான் சரியாக இருக்கும் என நினைத்தே பார்த்திபன் அவரை அழைத்தாராம். இந்தப்படத்தில் சாந்தனு பாக்யராஜ் மற்றும் பார்வதி நாயர் ஜோடியாக நடிக்கிறார்கள்.