ஏப்ரல்-11ல் ‘கோச்சடையான்’ ரிலீஸ் என தேதி அறிவித்துவிட்டார்கள். இனி தினுசு தினுசாக படத்திற்கு புரமோஷன் செய்யும் வேலைகள் ஆரம்பித்துவிடும். அந்தவகையில் முதல் ஆளாய் கோச்சடையான் புரமோஷனில் குதிக்க இருக்கிறது கார்பன் நிறுவனம்.
முதலாவதாக 10 லட்சம் ‘கோச்சடையான்’ ஸ்பெஷல் எடிசன் கார்பன் மொபைல்களை தென்னிந்தியா எங்கும் உள்ள 27000 ஷோரூம்களில் இறக்குகிறது கார்பன் நிறுவனம்.. இந்தக்கடைகளில் உள்ள கோச்சடையான் விளம்பர வளைவுகள், கோச்சடையான் முகமூடிகள் என எல்லாமே ஒரே கோச்சடையான் மயமாகத்தான் இருக்கபோகிறது.
அதேசமயம், இந்த மொபைல்களை அறிமுகப்படுத்துவதற்காகவே 60,000 வினாடிகள் எஃப்.எம்மிலும், 6,000 வினாடிகள் தொலைக்காட்சிகளிலும் விளம்பரங்கள் ஒளிபரப்பாக இருக்கின்றன. அது மட்டுமல்ல அறிமுக விழாவுக்கு முன்னதாகவே தென்னிந்தியாவில் வெளிவரும் அனைத்து மொழிப்பத்திரிக்கைகளிலும் மூன்று முழுப்பக்க விளம்பரங்களையும் கொடுக்க இருக்கிறது கார்பன்.. சரிதான்.. கோச்சடையான் ஜூரம் ஆரம்பிச்சிருச்சு…