தேர்தல் நெருக்கத்தில் சூடு கிளப்ப வரும் ‘கோ-2’..!

ko 2 release
ஐந்து வருடங்களுக்கு முன் வெளியான ‘கோ’ படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக ‘கோ-2’ படம் உருவாகியுள்ளது.. படத்தின் கதைக்களம் அரசியல்-மீடியா என்பதைத்தவிர முதல் பாகத்திற்கும் இதற்கும் துளியும் சம்பந்தம் இல்லை… பாபி சிம்ஹா, நிக்கி கல்ராணி ஜோடியாக நடிக்க, அரசியல்வாதியாக பிரகாஷ்ராஜ் நடித்துள்ளார். புதுமுகம் சரத் என்பவர் படத்தை இயக்கியுள்ளார்.

சமீபத்தில் வெளியான கோ-2’ படத்தின் ட்ரெய்லரை பார்த்தவர்கள் அதில் அரசியல் களம் சூடாக கையாளப்பட்டு இருப்பதை பார்த்து நிச்சயம் ஆச்சர்யப்பட்டிருப்பார்கள், அதை இன்னும் அதிகப்படுத்தும் விதமாக படத்தை வரும் மே-6ஆம் தேதி அதாவது தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடப்பதற்கு பத்து நாட்களுக்கு முன்பு ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். ஆக இந்தப்படம் வாக்காளர்களிடம் குறைந்த அளவாவது மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு என்றே சொல்லலாம்.